மருத்துவ குணம் கொண்ட கிழங்குகளில் ஒன்று முடவாட்டுக்கால் கிழங்கு.இது எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை குணப்படுத்தும்.நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்த முடவாட்டுக்கால் கிழங்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கிழங்கு பெயருக்கு ஏற்றவாறு முடக்கு வாத வலியை குணப்படுத்தச் செய்கிறது.
முடவாட்டுக்கால் கிழங்கின் பயன்கள்:
1)எலும்பு வலிமையை அதிகரிக்க முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.முடக்குவாத பாதிப்பில் இருந்து மீள இந்த கிழங்கை சாப்பிடலாம்.
2)தோள் பட்டை வலி குணமாக முடவாட்டுக்கால் கிழங்கில் சூப் செய்து குடிக்கலாம்.கால் வலி குணமாக முடவாட்டுக்கால் சூப் செய்து குடிக்கலாம்.
3)செரிமானப் பிரச்சனை சரியாக முடவாட்டுக்கால் கிழங்கு உட்கொள்ளலாம்.கை கால் வலி குணமாக முடவாட்டுக்கால் கிழங்கை உட்கொள்ளலாம்.
4)முதுகு வலியை குணப்படுத்திக் கொள்ள முடவாட்டுக்கால் கிழங்கை உட்கொள்ளலாம்.முடவாட்டுகால் கிழங்கில் சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.
முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்முறை:
தேவையான பொருட்கள்:-
**முடவாட்டுக்கால் கிழங்கு – ஒன்று
**பூண்டு – நான்கு பல்
**தக்காளி – ஒன்று
**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
**இஞ்சி – ஒரு பீஸ்
**மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
**வெங்காயம் – ஒன்று
**கறிவேப்பிலை – ஒரு கொத்து
**கொத்தமல்லி தழை – சிறிதளவு
**எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
**உப்பு – தேவையான அளவு
**தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு முடவாட்டுக்கால் கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நான்கு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து சூடாக்க வேண்டும்.
அடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய இஞ்சி,பூண்டு துண்டுகளை அதில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி துண்டுகளை அதில் போட்டு வதக்க வேண்டும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள முடவாட்டுக்கால் கிழங்கு துண்டுகளை அதில் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள்,மிளகுத் தூளை அதில் போட்டு வதக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுக்க வேண்டும்.பின்னர் கொத்தமல்லி தழை மற்றும் கறிவேப்பிலை இலைகளை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூட வேண்டும்.மூன்று விசில் வந்த பின்னர் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற அனைத்து நோய்களும் குணமாகும்.