சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமல் கல்லை கரைத்தெடுக்க சிறுகண்பீளை எனும் மூலிகையை பயன்படுத்தலாம்.சிறுகண்பீளை பூ,வேர் ஆகியவை சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
சிறுகண்பீளை பூ – ஒரு தேக்கரண்டி
சிறுகண் பீளை வேர் – சிறிதளவு
பால் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:-
முதலில் சிறுகண்பீளை பூ மற்றும் சிறுகன்பீளை வேரை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை உரல் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி அரைத்த சிறுகண்பீளை சாறு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பாலை குடித்து வந்தால் சிறுநீரக கல் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)வாழைத்தண்டு – ஒரு கப்
2)மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் வாழைத்தண்டு எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு வாழைத்தண்டை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் கொட்டிக் கொள்ள வேண்டும்.
அடுத்து சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த வாழைத்தண்டு சூப் கொதித்து வந்த பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு உற்றி பருக வேண்டும்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக வாழைத்தண்டு சூப் பருகலாம்.