மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

Photo of author

By Divya

மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லணுமா? அப்போ மோரில் இந்த ஒரு பொருளை மிக்ஸ் செய்து குடிங்க!!

Divya

உங்கள் மூட்டு வலிமையை அதிகரிக்க அதிக செலவு இல்லாத ஒரு எளிமையான வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு ஆரோக்கியம் மேம்படும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை இலை பொடி – 20 கிராம்
2)முருங்கை கீரை பொடி – 20 கிராம்
3)முடக்கத்தான் கீரை பொடி – 20 கிராம்
4)நெல்லிக்காய் பொடி – 20 கிராம்
5)கடுக்காய் பொடி – 20 கிராம்
6)மோர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

ஒரு ஈரமில்லாத டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் 20 கிராம் பிரண்டை இலை பொடி சேர்த்துக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் 20 கிராம் முருங்கை கீரை பொடி,20 கிராம் முடக்கத்தான் கீரை பொடி போட்டு கலந்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு 20 கிராம் நெல்லிக்காய் பொடி மற்றும் 20 கிராம் கடுக்காய் பொடி கொட்டி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.பிறகு ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிக்ஸ் செய்து வைத்துள்ள பொடியை ஒரு தேக்கரண்டி அளவு மோரில் கலந்து கொள்ள வேண்டும்.இந்த மோரை குடித்தால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குணமாகும்.அதேபோல் இந்த பொடியை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் மிக்ஸ் செய்து பருகினால் மூட்டு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வாத நாராயணன் இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

வாத நாராயணன் இலையை உலர்த்தி பொடியாக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டப்பாவில் இந்த பொடியை போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த வாத நாராயணன் இலை பொடி போட்டு கலந்து குடித்தால் மூட்டு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாகும்.