நமது உடலில் அக்குள்,தொடை மற்றும் இறுக்கமான ஆடை அணியும் இடத்தில் கருமை உண்டாகும்.இந்த கருமை நிறம் போக கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நலுங்கு மாவு – இரண்டு தேக்கரண்டி
2)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – சிறிதளவு
4)பீர்க்கங்காய் நார் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
பச்சை பயறு,கடலை பருப்பு,வெட்டி வேர்,சந்தனம்,மஞ்சள் கிழங்கு,ரோஜா இதழ் போன்றவற்றை பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இது
நலுங்கு மாவு என்றபெயரில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வாங்கி வாருங்கள்.பிறகு கிண்ணம் ஒன்றை எடுத்து நலுங்கு மாவு பொடி இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.நலுங்கு மாவு கிடைக்காதவர்கள் பச்சை பயறை பவுடராக அரைத்து சலித்து பயன்படுத்தலாம்.
இப்பொழுது தயாராக வைத்திருக்கும் பேஸ்டை உடலில் கருமை நிறைந்த பகுதியில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.பிறகு ஒரு பீர்க்கன் நார் கொண்டு கருமையான இடத்தில் வைத்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.அதன் பிறகு தண்ணீர் கொண்டு குளிக்க வேண்டும்.இப்படி செய்தால் தோல் கருமை நீங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)பச்சை பயறு மாவு – இரண்டு தேக்கரண்டி
2)சந்தனத் தூள் – ஒரு தேக்கரண்டி
3)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
4)ரோஸ் வாட்டர் – மூன்று தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி பச்சை பயறு மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சந்தனத் தூள் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு மூன்று தேக்கரண்டி அளவு ரோஸ் வாட்டரை அதில் ஊற்றி பேஸ்ட் பக்குவத்திற்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை உடலில் உள்ள கருமை பகுதியில் பூசி ஸ்க்ரப் செய்தால் கருப்பு நிறம் நீங்கிவிடும்.