மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

Photo of author

By Gayathri

மே 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்!!

Gayathri

இந்தியன் ரயில்வே ஆனது பயணிகளுக்கு புதிய மாற்றங்களை வருகிற மே 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

 

புதிய மாற்றங்கள் :-

 

✓ பயணிகளின் பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பொழுது படுக்கை வசதி கொண்ட முன்பதிவு பட்டியல் பயணம் செய்யக்கூடாது.

 

✓ ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்தவருக்கு அவருடைய பெயர் காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது என்றால் அது தானாகவே இரத்தாகி அந்த டிக்கெட்டுக்கான பணம் பயனரின் உடைய வங்கி கணக்கில் வந்துவிடும். இது போன்ற டிக்கெட்டை வைத்தும் ரயிலில் பயணம் செய்யக்கூடாது.

 

✓ ஒருவேளை ரயில் நிலையத்தில் நேரில் சென்று எடுக்கப்படக்கூடிய டிக்கெட் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் முன்பதிவு பெட்டிகளில் குறிப்பாக ஸ்லீப்பர் மற்றும் ஏசி கோச்சுகளில் ஏறக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

 

✓ டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கக்கூடியவர்கள் மேல் கூறியபடி பயணம் செய்தால் டிக்கெட் பரிசோதகர்கள் அந்த பயணியிடம் அபராதம் விதிக்கலாம் என்றும் மேலும் அவர்களை பொது பெட்டிக்கு மாற்றலாம் என்றும் இந்தியன் ரயில்வே புதிய வீதியில் தெரிவித்திருக்கிறது.