வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

Photo of author

By Divya

வீட்டிலிருக்கும் பொருள் வைத்தே தொண்டை வலி தொண்டை கரகரப்பு-க்கு ஒரே நிமிடத்தில் நிரந்தர தீர்வு காணலாம்!!

Divya

பருவநிலை மாற்றம்,சளி,இருமல் போன்ற காரணங்களால் தொண்டை பகுதியில் கிருமி தொற்றுகள் உருவாகி வலி மற்றும் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.தொண்டை பகுதியில் அதிக வலி இருந்தால் அதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.

தீர்வு 01:

உப்பு கலந்த வெந்நீர்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.இந்த உப்பு நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

மஞ்சள் தூள் கலந்த வெந்நீர்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் அதில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை வலி குணமாகும்.

தீர்வு 03:

தூதுவளை இலை சாறு மற்றும் தேன்

நான்கு அல்லது ஐந்து தூதுவளை இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் தொண்டை வலி பிரச்சனை முழுமையாக குணமாகவிடும்.

தீர்வு 04:

பூண்டு மற்றும் தேன்

முதலில் நான்கு பல் பூண்டை தோல் நீக்கிவிட வேண்டும்.பின்னர் இதை கிண்ணம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி இரண்டு மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.பிறகு இதை மென்று சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் தொண்டை வலி குணமாகிவிடும்.