எப்பொழுதும் இருமல் பிரச்சனையை சந்தித்து கொண்டே இருப்பவர்களுக்கு அருமையான கை மருந்து இங்கு தரப்பட்டுள்ளது.இதை முயற்சி செய்து வந்தால் இருமல் பாதிப்பு முழுமையாக குணமாகும்.
தீர்வு 01:
கடுகு பொடி – ஐந்து கிராம்
தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் கால் தேக்கரண்டி அளவு கடுகு எடுத்து வாணலியில் போட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டப்பாவில் இந்த பொடியை கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கிண்ணம் ஒன்றில் கடுகு பொடி 5 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இதை சாப்பிட்டால் இருமல் பிரச்சனை முழுமையாக குணமாகிவிடும்.
தீர்வு 02:
துளசி இலை – பத்து
தேன் – சிறிதளவு
முதலில் பத்து துளசி இலைகளை சுத்தப்படுத்திவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இந்த துளசி சாறில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட வேண்டும்.இப்படி செய்தால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.
தீர்வு 03:
ஆடாதோடை இலை – ஒன்று
தேன் – ஒரு தேக்கரண்டி
முதலில் ஒரு ஆடாதோடை இலையை எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கிண்ணத்தில் இந்த ஆடாதோடை இலை சாறு சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் பாதிப்பு குணமாகும்.