1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

Photo of author

By Divya

1 நாளில் வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேற.. தண்ணீருடன் இதை சேர்த்து பருகுங்கள்!!

Divya

ஆரோக்கியம் இல்லாத உணவுமுறை பழக்கத்தால் குடலில் புழுக்கள் உருவாகி பல்வேறு தொந்தரவுகளை கொடுக்கிறது.குடற்புழுக்களை வெளியேற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

குடற்புழு அறிகுறிகள்:-

1)வயிற்று வலி
2)மலத்தில் புழு வெளியேறுதல்
3)வயிற்றுப்போக்கு
4)மலம் கழிப்பதில் சிரமம்
5)ஆசனவாய் பகுதியில் குடைச்சல்
6)வயிறு பிடிப்பு

குடற்புழுக்கான காரணங்கள்:-

1)ஆரோக்கியம் இல்லாத உணவு
2)தரமற்ற குடிநீர்
3)ஊட்டச்சத்து குறைபாடு
4)இனிப்பு உணவுகள்

குடற்புழுக்களை வெளியேற்ற வீட்டு வைத்தியங்கள்:

1.பப்பாளி இலை
2.தண்ணீர்

முதலில் ஒரு பப்பாளி இலையை பறித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பப்பாளி இலை ஜூஸை கிளாஸிற்கு வடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த பப்பாளி ஜூஸை வெறும் வயிற்றில் பருக வேண்டும்.இவ்வாறு செய்தால் குடல் புழு அழிந்துவிடும்.

1.வேப்பிலை
2.தண்ணீர்

சிறிதளவு வேப்பிலையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த வேப்பிலை சாறை பருகி வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும்.

1.பாகல் இலை
2.தண்ணீர்

இரண்டு அல்லது மூன்று பாகல் இலையை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைக்க வேண்டும்.இந்த பாகல் இலை ஜூஸை வடிகட்டி பருகினால் குடற்புழுக்கள் வெளியேறிவிடும்.