IRTC: இந்தியாவின் முக்கிய போக்குவரத்து துறை எனப்படும் ரயில்வே, நாளுக்கு நாள் பயணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விதிகளை இன்று (மே 1) முதல் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவின் விதிமுறைகள், தட்கல் முன்பதிவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் ரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
முதலாவது, அனைத்து வகை ரயில்களுக்கும் 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், முன்பதிவால் ஏற்படும் இடர்பாடுகள் நீங்கும்.
இரண்டாவது, தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஒரு ஐடி மூலம் ஒரு நாளில் இரண்டே தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவுசெய்ய முடியும். மேலும் தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரம் 11 மணிக்கு இருந்ததை 10 மணிக்கு மாற்றி, பயணிகள் விரைவில் டிக்கெட் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு 30% இருக்கைகள் தட்கல் சேவைக்கு ஒதுக்கப்படும்.
மூன்றாவது, டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்ப பெறும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் 75%, 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50% மட்டுமே திரும்ப பெற முடியும். 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப கிடைக்காது. ஆனால், வெயிட்டிங் லிஸ்டில் இருந்து கன்ஃபார்ம் ஆகாத பயணிகளுக்கு முழு பணம் திரும்ப கிடைக்கும்.
இந்த புதிய விதிமுறைகள், அனைத்து பயணிகளும் தெரிந்து கொண்டு தங்களின் பயண திட்டங்களை அதற்கேற்ப அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது பாதுகாப்பான மற்றும் ஒழுங்குமுறைபடுத்தப்பட்ட சேவைக்கு வழிவகுக்கும்.