தமிழக அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் போட்டி தேர்வுகளில் ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
ஒருபுறம் நான் முதல்வன் திட்டத்தில் கீழ் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து தமிழக மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்து கொண்டு இருக்கும் நிலையில் மற்றொருபுறம் அரசு பணியில் மாணவர்கள் சேர்வதற்கு தமிழக அரசே நான் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதனுடைய ஒரு கட்டமாக தான் தற்பொழுது ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளை எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு உடன் இலவச பயிற்சி வகுப்புகள் 6 மாத காலத்திற்கு எடுக்க இருப்பதாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் மார்ச் 7ஆம் தேதி என்று துவங்கப்பட்ட போட்டி தேர்வு பிரிவானது தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டி தேர்வுகளை எளிதாக வெற்றி பெறும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. 2024 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசினுடைய முக்கிய போட்டி தேர்வுகளான ரயில்வே மற்றும் வங்கி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இதற்காக ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உணவு தங்குமிடம் போன்றவற்றை கொடுத்து அதோடு 6 மாதகாலப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் மே 13 ஆம் தேதிக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை https://www.naanmudhalvan.tn.gov.in என்ற அரசினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.