இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருக்கக்கூடிய வணிகர்கள் மற்றும் கைவினை பொருட்கள் செய்யக் கூடியவர்களுக்கு குறைந்த வட்டியில் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா :-
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா (PM Vishwakarma Yojana) என்பது பாரம்பரிய கைத்தொழிலாளர்களை மற்றும் கைவினைஞர்களை ஆதரிக்கும் ஒரு மத்திய அரசுத் திட்டமாகும். இந்த திட்டம் 17 பாரம்பரிய தொழில்கள் செய்யும் மக்களுக்கு உதவுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 5 சதவிகித வட்டியுடன் 3 லட்சம் ரூபாய் வரை கடன் உதவியானது வழங்கப்பட்டு வருகிறது.
எடுத்துக்காட்டாக:
✓ கோலாறி (கைத்தறி நெசவு)
✓ தையல்
✓ ஆசாரி
✓ செப்புப்பணிக்காரர்
✓ வேலைப்பாடு செய்பவர் (Goldsmith, Blacksmith, Potter, Cobbler, etc.)
முக்கிய அம்சங்கள்:
✓ நிதி உதவி – முதற்கட்டமாக ரூ.1 லட்சம் மற்றும் இரண்டாம் கட்டமாக கூடுதலாக ரூ.2 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.
✓ திறன் மேம்பாட்டு பயிற்சி – தொழில் வளர்ச்சிக்கான பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
✓ முயற்சி ஊக்கத்தொகை – பயிற்சிக்கான ஊக்கமாக தினமும் ரூ.500 வழங்கப்படும்.
✓ மார்க்கெட்டிங் ஆதாரம் – தங்கள் தயாரிப்புகளுக்கான சந்தை அணுகலை எளிதாக்கம்.
✓ டிஜிட்டல் ஆதாயங்கள் – யூபிஐ, ஜிஎஸ்டி போன்றவற்றை அறிமுகப்படுத்தல்.
தகுதியுடையோர்:
பாரம்பரிய கைவினை மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர்.
18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள்.
அரசு அல்லது தனியார் வேலைக்கு செல்லாதோர்.
மேலே குறிப்பிடப்பட்ட இருக்கக்கூடியவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியுடையவர்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற நினைக்கக் கூடியவர்கள் pmvishwakarma.gov.in இன்று அதிகார பூர்வ இணையதளத்தில் சென்று ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை நிரப்பி பதிவிட வேண்டும். 3 நிலையான சரிபார்ப்புக்கு பின் திட்டத்தின் கீழ் பயனுடையவர்களுக்கு கடனுதவியானது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.