குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

Photo of author

By Divya

குறட்டை விடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? ஒரு ஏலக்காய் வைத்து குறட்டைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!

Divya

இன்று பெரும்பாலானோர் குறட்டை பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.பெரும்பாலும் ஆண்களே குறட்டைவிட்டு உறங்குகின்றனர்.உடல் பருமன்,நுரையீரல் பிரச்சனை,தொண்டை சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு குறட்டை வரும்.

குறட்டை தீவிர பிரச்சனை இல்லையென்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் குறட்டை பாதிப்பால் மாரடைப்பு அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே குறட்டை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்.

குறட்டையை விரட்ட உதவும் வீட்டு வைத்தியம்:-

1)ஆலிவ் எண்ணெய் – அரை தேக்கரண்டி
2)தேன் – கால் தேக்கரண்டி

கிண்ணம் ஒன்றில் அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால் குறட்டை வருவது கட்டுப்படும்.

1)யூகலிப்டஸ் எண்ணெய்
2)தண்ணீர்

பாத்திரத்தில் சூடு நீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிதளவு யூக்கலிப்டஸ் ஆயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதை ஆவிபிடித்தால் குறட்டை வருவது கட்டுப்படும்.

1)நெய் – சிறிதளவு

தாளிப்பு கரண்டி ஒன்றில் சிறிதளவு நெய் ஊற்றி லேசாக சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.இந்த நெய்யை மூக்கு துவாரத்தில் விட்டால் குறட்டை வருவது கண்ட்ரோல் ஆகும்.

1)ஏலக்காய் பொடி – கால் தேக்கரண்டி
2)தண்ணீர் – சிறிதளவு

பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.இதை அடுப்பில் வைத்து சூடுபடுத்துங்கள்.

பின்னர் இதில் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து லேசாக சூடானதும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.இந்த நீரை பருகினால் குறட்டை வருவது கட்டுப்படும்.