சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஸ்ரீ தயா பவுண்டேஷன் சார்பில் பாரத் மார்க்கெட்டிங் என்ற பெயரில் லதா ரஜினிகாந்த் உடைய பாரம்பரிய கைவினை பொருட்கள் விவசாய பொருட்கள் குடிசை தொழில் பொருட்கள் கண்காட்சி மே மாதம் 1 ஆம் தேதி துவங்கியது.
இந்த கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று கண்காட்சியை பார்வையிட லதா ரஜினிகாந்த் வந்த பொழுது செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு மற்றும் தமிழகத்தில் அதிகமாக இருக்கக்கூடிய கலாச்சார சீரழிவு பற்றி பேசி இருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் லதா ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது :-
நம் நாட்டில் இருக்கக்கூடிய அடையாளங்கள் எல்லாமே சிறந்து விளங்க கூடியவை அவற்றை அறிய விடக்கூடாது என்றும் கைவினைப் பொருட்கள் விவசாய உற்பத்தி பொருட்கள் போன்றவற்றின் மூலம் பலருடைய வாழ்வாதாரம் கிடைத்து வருவதாகவும் நமது கலைகளை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்றும் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள யோகாவை எடுத்துக் கொள்கின்றனர் என்றும் நமது தமிழர்கள் பண்பாக பேசக்கூடியவர்கள் என்றும் தெரிவித்ததோடு இன்றைக்கு இருக்கக்கூடிய கலாச்சாரம் மரியாதையே இல்லாமல் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வயதிற்கு தகுதிக்கோ மரியாதை இல்லாமல் ஒரு பாஷையில் அனைவரையும் பேசி விடுவதாக வருத்தம் தெரிவித்து இருக்கிறார். வெளிநாட்டு மோகத்தில் அனைவரும் மூழ்கி செல்லாமல் தமிழர்களுடைய பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஓய்வு குறித்து பேசும் பொழுது, ரஜினிகாந்த் ஓய்வு குறித்து எனக்கு தெரிந்தால் கட்டாயமாக நான் சொல்லலாம் என்றும் இன்னும் அதனைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை என்றும் ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பார் என்றும் தெரிவித்திருக்கிறார்.