2023 ஆம் ஆண்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் மட்டுமே பெறப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மீதமுள்ள 2 சதவிகிதம் இந்தியாவில் இருக்கக்கூடிய பலரிடம் இருப்பதாகவும் அவற்றை பயன்பாட்டில் இருந்து நீக்கினாலும் அந்த நோட்டுக்களை மக்கள் மாற்றிக் கொள்வதற்கான வழிகள் திறந்திருப்பதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
இந்தியன் ரிசர்வ் வங்கியானது 2025 ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி என்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி,
மே 19 2023 ஆம் ஆண்டு முதல் உலகத்திலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட பொழுதிலும் அவற்றில் 98.24% மட்டுமே இதுவரை பெறப்பட்டு இருப்பதாகவும் மீதி 6 ஆயிரம் கோடிக்கு மேல் மக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது இன்னும் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கக் கூடியவர்கள் என்ன கவலையும் பட வேண்டாம் என்றும் இதனை வங்கிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் ரிசர்வ் வங்கி இதனை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான மாற்று வழிகளை வழங்கி இருக்கிறது.
குறிப்பாக தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் தங்களுடைய பழைய 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் என்றும் அல்லது தங்களுடைய 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் இந்த வசதி இன்றளவும் மக்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முடிக்க தொடர்ந்து உதவுவதாகவும் இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. உதவியோடு தங்களுடைய 2000 ரூபாய் நோட்டுகளை அலுவலகங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பயனர்களின் உடைய வங்கி கணக்கில் அந்த 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.