இருசக்கர வாகனத்தை ஓட்ட கூடியவர்கள் அழியக்கூடிய ஹெல்மெட்டில் பல ஹெல்மெட்டுகள் தரம் இல்லாதவை என்றும் அதனால் இனி முத்திரை பதிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை அணிந்தால் மட்டுமே சாலை விதிகளின் படி அவர்களை காவல் துறையினர் எந்தவித அபராதமும் இன்றி விடுவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் அதிக அளவு போலி ஹெல்மெட்டுகள் தயாரிப்பதாக தொடர்ந்து வந்த புகார்களை அடுத்து இதனை பொதுமக்கள் பயன்படுத்த முழுவதுமாக தடை விதித்திருக்கிறது உத்திரப்பிரதேச மாநில அரசு. மேலும் BIS சான்று வழக்கப்பட்டு தலைக்கவசங்கள் மட்டும்தான் அணிய வேண்டும் என்றும் தரம் இல்லாத தலை கவசங்களால் ஒரு ஆண்டுக்கு 24 ஆயிரம் பேர் உயிரிழப்புக்காக தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து 2WHMA தலைவர் ராஜூவ் கபூர் தெரிவித்திருப்பதாவது :-
போலியான ஹெல்மெட்டுகள் அமைதியான கொலையாளிகள் என்றும் உத்தரபிரதேச அரசு எடுத்து இருக்கக்கூடிய துணிச்சலான நடவடிக்கை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட வேண்டும் என்றும் BIS சான்றுடன் இருக்கக்கூடிய தலைக்கவசங்கள்தான் இந்தியாவில் அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஒரு தேசிய சாலை பாதுகாப்பு இயக்கத்தில் தொடக்கமாக இந்த சட்டம் அமையக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை அளித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.