தமிழ்நாடு அரசின் மூலம் படித்த இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோராக பயிற்சிகள் வழங்குவதோடு கடன் வகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகையை கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சில முக்கிய முடிவுகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது.
இது குறித்த திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கக்கூடிய அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 31ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும் என்றும் முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலும் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மேல்நிலை வகுப்பு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவு தாருங்கள் அனைவருமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பட முடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பட நினைக்கும் மாற்றுத்திறனாளிகள் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் போதும் என்றும் பத்தாம் வகுப்பு மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்த மார்ச் 31 2025-ம் தேதி முதல் ஓராண்டு நிறைவடைந்திருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பட தகுதியுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான வயது வரம்பு இதர பிரிவினர் என்றால் 40 வயது என்றும் பழங்குடியின பிரிவினருக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ஆனது ஒரு ஆண்டுக்கு 72,000 மிகாமல் இருக்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளின் உடைய உச்சவரம்பு வயது வரம்பு இது போன்ற எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதியோர் உதவித்தொகை பெறுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதி இல்லை என்றும் பயந்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது படித்துக் கொண்டிருக்கக் கூடியவராக இருக்கக் கூடாது என்றும் இந்த தகுதிகளை உள்ளடக்கிய பதிவு தாருங்கள் தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.