90களில் தமிழ் சினிமா துறையில் மிகப்பெரிய நடிகையாக வளம் வந்த நடிகை தேவயானி அவர்கள் திடீரென குடும்ப வாழ்க்கையில் நுழைந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விளக்கினார். அவருடைய திருமணமானது ரசிகர்களை மட்டுமல்லாது திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சினிமா துறையை விட்டு விலகினாலும் சின்ன துறையில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த தேவயானி அவர்கள் அமீபத்தில் நிழற்குடை திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்க கூடிய நிலையில் தன்னுடைய காதல் திருமண வாழ்க்கை குறித்து நடிகை தேவயானி வெளிப்படையாக பேசியுள்ளார்.
தன்னுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து தேவயானி பேசியிருப்பதாவது :-
சூரியவம்சம் திரைப்படத்தின் போது தான் தனக்கும் ராஜகுமாரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அப்பொழுதே இருவரும் நண்பர்களாக மாறிவிட்டதாகவும் நடிகை தேவயானி தெரிவித்து இருக்கிறார். சூரியவம்சம் திரைப்படத்தின் உதவி இயக்குனராக ராஜகுமார் வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் அவருடைய நீ வருவாய் என திரைப்படத்தில் நடிப்பதற்காக கேட்ட பொழுது அவர் மீது தனக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டதாகவும் அது மட்டுமல்லாது பலரும் அவர் குறித்து பாசிட்டிவாக தெரிவித்ததாகவும் அவருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது நேர்மையாக இருக்கிறார். உண்மையான அன்பை கொடுக்கிறார். இதைத்தவிர தனக்கு தன்னுடைய வாழ்வில் வேறு எதுவும் வேண்டாம் என்பதற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டதாக நடிகை தேவயானி தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் சிறந்த மனிதர் மட்டுமல்லாது தற்பொழுது நல்ல அப்பாவாகவும் இருக்கிறார் என்றும் இந்த திரைப்படம் கூட பிள்ளைகள் குறித்து பார்வை பெற்றோரிடத்தில் எப்படி இருக்கிறது என்பதை பேசுகிறது என்றும் நிழற்குடை திரைப்படத்தை குறித்து நடிகை தேவயானி பேசி இருக்கிறார்.