கோடை காலத்தில் நாம் சாப்பிடும் வெள்ளரிக்காய் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.இந்த வெள்ளரிக்காயில் இருக்கின்ற விதை ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
இந்த வெள்ளரி விதையை தினமும் ஒரு ஸ்பூன் என்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.வெள்ளரி விதையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
**நார்ச்சத்து **வைட்டமின் இ **துத்தநாகம் **மெக்னீசியம் **ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ்
வெள்ளரி விதை பயன்கள்:
1)சரும வறட்சியை போக்கி மிருதுவான சருமம் பெற வெள்ளரி விதையை சாப்பிடலாம்.ஒரு ஸ்பூன் வெள்ளரி விதையை பொடித்து தயிரில் கலந்து குடித்தால் சரும கொப்பளங்கள் வராமல் இருக்கும்.
2)வெள்ளரி விதை பொடியை பாலில் கலந்து குடித்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்பில் இருந்து மீளலாம்.சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் பாலில் வெள்ளரி விதை பொடி கலந்து குடிக்கலாம்.
3)தினமும் வெள்ளரி விதை சாப்பிட்டு வந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி தடுக்கப்படும்.
4)மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் காலையில் வெள்ளரி விதை ஊறவைத்து சாப்பிடலாம்.
5)சிறுநீர் கடுப்பு இருப்பவர்கள் வெள்ளரி விதையை ஊறவைத்து அரைத்து தொப்புளை சுற்றி பற்றுப்போட்டால் பலன் கிடைக்கும்.
6)தினமும் வெள்ளரி விதை தேநீர் செய்து குடித்து வந்தால் உடலில் கொழுப்பு குறையும்.
7)கர்ப்பிணி பெண்கள் வெள்ளரி விதை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
8)தைராய்டு பாதிப்பில் இருந்து மீள தினமும் வெள்ளரி விதையை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
9)முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய தினமும் வெள்ளரிவிதை ஊறவைத்து சாப்பிடலாம்.
10)வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளை வெள்ளரி விதை சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம்.வெள்ளரி விதையை பொடித்த மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு தணியும்.