உங்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு இருந்தால் அதில் இருந்து மீள சூடான பசும் பாலில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொடியை கலந்து குடிங்க.ஆண்களிடையே விறைப்புத் தன்மை குறைபாடு சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.இதற்கு உரிய நிவாரணம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)பால் – ஒரு கிளாஸ்
2)பாதாம் பருப்பு – 10
3)கசகசா – ஒரு தேக்கரண்டி
4)நீர்முள்ளி விதை – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
முதலில் பத்து பாதாம் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி கசகசாவை கால் கிளாஸ் பாலில் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி நீர்முள்ளி விதையை பொடித்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பால் கொதி வந்த பின்னர் அரைத்த பாதாம் பருப்பு பொடியை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து பாலில் ஊறவைத்த கசகசாவை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த நீர்முள்ளி விதை பொடியை அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.
அதேபோல் முருங்கை பருப்பு மற்றும் பூனைக்காலி விதையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு கிளாஸ் சூடான பாலில் கலந்து குடித்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.கசகசா மற்றும் முந்திரி பருப்பை பொடித்து ஒரு கிளாஸ் பாலில் கலந்து குடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.