நாம் அனைவரும் மறந்து வரும் ஒரு மூலிகை கட்டுக்கொன்னை.இது நாட்டு மருத்துவத்தில் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த கட்டுக்கொன்னை கொன்றை மர வகையை சேர்ந்தது.இந்த மூலிகை இருமல்,சுவாசப் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.
கட்டுக்கொன்னை மூலிகையின் வேரை சுத்தம் செய்துவிட்டு கஷாயம் செய்து குடித்தால் சளி,காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.
கட்டுக்கொன்னை இலையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் இருமல் பிரச்சனை சரியாகும்.
சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து மீள கட்டுக்கொன்னை வேரை பொடித்து பாலில் கலந்து பருகலாம்.நுரையீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற கட்டுக்கொன்னை இலையை பொடித்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
கடுகு எண்ணையில் கட்டுக்கொன்னை வேர் மற்றும் இலை பொடியை மிக்ஸ் செய்து மூட்டு பகுதியில் தடவினால் வலி,வீக்கம் குறையும்.
கட்டுக்கொன்னை இலையை பொடித்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து குடித்தால் சளி தொல்லை நீங்கும்.உடலில் இருக்கின்ற உஷ்ணம் தணிய கட்டுக்கொன்னை இலையை பொடித்து மோரில் கலந்து சாப்பிடலாம்.உடலில் படியும் அழுக்குகளை வெளியேற்ற கட்டுக்கொன்னை மூலிகை வேரை பாலில் கலந்து குடிக்கலாம்.
கட்டுக்கொன்னை மூலிகை கஷாயம் செய்வது எப்படி?
தேவைப்படும் பொருட்கள்:
கட்டுக்கொன்னை இலை பொடி
கட்டுக்கொன்னை வேர் பொடி
தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி கட்டுக்கொன்னை இலை பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி கட்டுக்கொன்னை வேர் பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு கப் தண்ணீர் சுண்டி அரை கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.பின்னர் இதை ஆறவைத்து பருகலாம்.