உடல் இயக்கம் நன்றாக இருக்க தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம்.உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் சோர்வு,உடல் வறட்சி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.உடலில் தண்ணீர் சத்து குறைந்தால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துவிடும்.இப்படி உடல் இயக்கத்திற்கு அவசியமான ஒன்றாக கருதப்படும் தண்ணீரை உணவு சாப்பிடும் பொழுது குடிக்கலாமா என்பது பலரின் சந்தேகமாக இருக்கின்றது.
மருத்துவ நிபுணர்கள் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடிக்க கூடாது என்று கூறுகின்றனர்.சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் உணவு எளிதில் செரிக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் சாப்பிடும் பொழுது தண்ணீர் குடித்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும்.நாம் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடித்தால் செரிமான மண்டலத்தில் இருக்கின்ற அமிலங்கள் நீர்த்து செரிமானக் கோளாறை ஏற்படுத்திவிடும்.
சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.நாம் உணவு உட்கொள்ளும் பொழுது தண்ணீர் குடித்தால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டுவிடும்.ஏற்கனவே செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
நாம் சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகலாம்.அதேபோல் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
ஒருவேளை உணவு சாப்பிடும் பொழுது தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை இருந்தால் சிறிதளவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.உணவை நன்றாக மென்று சாப்பிட்டால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க வேண்டிய நிலை ஏற்படாது.எனவே இனி சாப்பிடும் போது தண்ணீர் பருகுவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்வது நல்லது.