இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

Photo of author

By Divya

இந்த 05 அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்கள் இதய ஆரோக்கியம் டேஞ்சரில் இருக்கென்று அர்த்தம்!!

Divya

நமது உடலில் முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு இதயம்.இன்று பெரும்பாலான மக்கள் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.மாரடைப்பு,பக்கவாதம்,நெஞ்சு வலி,சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பல பாதிப்புகளை இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கின்றனர்.

நமது இதய ஆரோக்கியம் பாதிக்கப்பட காரணம் நாம் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முதன்மை காரணம்.உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடுகிறது.

அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகள் இதய ஆரோக்கியத்தை பலவீனப்படுத்திவிடும்.உங்கள் இதய ஆரோக்கியம் மோசமாகிவிட்டதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.உங்கள் இதயம் பலவீனமாக இருப்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.

1)உங்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்பட்டால் இதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.நீங்கள் மல்லாந்து படுத்திருக்கும் போது உங்களுக்கு மூச்சத் திணறல் அதிகமாக இருந்தால் இதய பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.

2)உங்களுக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.உங்கள் உடல் செயல்பாடு மெதுவாக இருந்தால் உங்கள் இதயம் பலவீனமடைந்துவிட்டது என்று அர்த்தம்.

3)கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்தால் இதயம் பலவீனமடைந்துவிட்டதாக அர்த்தம்.கணுக்கால் பகுதியில் திரவம் சேர்ந்து வீங்கி காணப்படும்.அதேபோல் வயிற்றுப் பகுதியிலும் வீக்கம் ஏற்படும்.

4)மார்பு பகுதியில் வலி,ஊசி குத்தல் உணர்வு இருந்தால் அது இதய பலவீனத்தை காட்டுகிறது.அடிக்கடி மார்பு பகுதியில் இழுத்து பிடித்தல் பிரச்சனை இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதை காட்டுகிறது.

5)சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனை இருப்பவர்களின் இதயம் பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல் அடிக்கடி தலைச்சுற்றல் பாதிப்பு இருந்தால் இதயம் பலவீனமடைந்துவிட்டது என்று அர்த்தம்.உடல் பலவீனம்,பசியின்மை,குமட்டல் போன்ற பாதிப்புகள் இதயம் பலவீனத்தை உணர்த்துகிறது.அதிகளவு சிறுநீர் கழிக்கும் நிலை வந்தால் அது இதய பலவீனத்தை உணர்த்துகிறது.