உடல் எடையை குறைக்க கடினமான டயட் முறையை பாலோ செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.நாம் ஆரோக்கிய உணவுகளை சாப்பிடும் உடல் எடையை குறைக்கலாம்.உடலில் தொப்பை,தொடை போன்ற பகுதிகளில் அதிகளவு கொழுப்பு படிகிறது.இதை குறைக்க நாம் எந்தமாதிரி உணவுமுறை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து விவரிக்கப்பட்டிருக்கிறது.
உடல் எடையை குறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய உணவுமுறை பழக்கங்கள்:
காலை 6 மணி
வெதுவெதுப்பான தண்ணீர்
க்ரீன் டீ
லெமன் டீ
நீங்கள் காலையில் எழுந்ததும் வெது வெதுப்பான த்ண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.சர்க்கரை நிறைந்த டீ,காபிக்கு பதில் க்ரீன் டீ,லெமன் டீ போன்றவை செய்து பருகலாம்.
காலை 7 மணி
பால்
ஓட்ஸ்
வேகவைத்த முட்டை
புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.எனவே தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முயலுங்கள்.அதேபோல் பால்,ஓட்ஸ் கஞ்சி செய்து குடித்து உடல் எடையை குறைக்கலாம்.
காலை 8 மணிக்கு
வண்ண உணவு
கீரை,கூட்டு,பொரியல்,சாதம் போன்ற வண்ண உணவுகளை சாப்பிடலாம்.எண்ணெய் உணவுகள்,வறுத்த உணவுகளை தவிர்த்துவிட்டு எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்.
காலை 10 மணி
ஆரஞ்சு,ஆப்பிள்,மாதுளை போன்ற பழங்களை சாப்பிடலாம்.பழச்சாறு செய்து பருகலாம்.காய்கறிகள்,முளைக்கட்டிய பயறுகளை கொண்டு சலாட் செய்து சாப்பிடலாம்.
மதிய நேரம்
சப்பாத்தி
ராகி களி
தயிர் சாதம்
மதிய நேரத்தில் கோதுமை உணவுகள்,ராகி உணவுகள்,தயிர் உணவுகளை சாப்பிடலாம்.உணவில் குறைவான அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது.
மாலை 4 மணி
மூலிகை காபி அல்லது க்ரீன் டீ
வேலை முடிந்து வந்த பிறகு சர்க்கரை பானங்கள் பருகுவதை தவிர்த்துவிட்டு மூலிகை பொருட்களை பயன்படுத்தி டீ செய்து குடிக்கலாம்.
இரவு 7 – 8 மணி
கோதுமை ரொட்டி,காய்கறி சாலட் போன்ற எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை சாப்பிடலாம்.குறைவான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இரவு 9 மணி
இரவு உணவு உட்கொண்டு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஆன பின்னர் உறங்க வேண்டும்.குறைந்தது 8 மணி நேரம் இரவு உறக்கத்தை அனுபவிக்க வேண்டும்.