உடல் உள்ளுறுப்புகளில் கழிவுகளை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.உடலில் தேங்கும் கழிவுகள் சிறுநீரகம்(கிட்னி) வழியாக திரவ வடிவில் வெளியேற்றப்படுகிறது.
இந்த சிறுநீரகம் பழுதடைந்தால் கழிவுகள் வெளியேறாமல் அப்படியே தேங்கிவிடும்.இதனால் கல்லடைப்பு,யூரிக் அமில பாதிப்பு,சிறுநீர் பாதை தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்.
சிறுநீரக கழிவுகளை வெளயேற்ற உதவும் பழங்கள்:
1)ஆரஞ்சு
வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படும் ஆரஞ்சு பழம் சிறுநீரக கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.அதேபோல் எலுமிச்சம் பழத்தை ஜூஸாக செய்து சாப்பிட்டால் சிறுநீரக கழிவுகள் வெளியேறும்.
2)கருப்பு திராட்சை
இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் கழிவுகள் கற்கள் படியாமல் இருக்கும்.கருப்பு திராட்சை பழத்தை விதையுடன் சாப்பிட்டால் முழு பலன் பெறலாம்.
3)தர்பூசணி
நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் சிறுநீரக ஆரோக்கியம் மேம்படும்.சிறுநீரகத்தில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற தர்பூசணி சாறு பருகலாம்.
4)பெர்ரிஸ்
கிரான் பெர்ரிஸ் சிறுநீரக கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.அதேபோல் ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்ற பண்புகள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
5)மாதுளை
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக ஆரோக்கியம் அதிகரிக்கும்.அதேபோல் வெள்ளரி பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கழிவுகள் வெளியேறும்.