ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

ஆண் மலட்டு தன்மை நீங்க.. விந்து கெட்டிப்பட இந்த விதையை அரைத்து சூடான பாலில் கலந்து குடிங்க!!

Divya

மகிழம் மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பொருட்கள் அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏகப்பட்டது நிறைந்து காணப்படுகிறது.இந்த மகிழம் மரத்தின் விதை ஆண்களின் விந்து பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

நீர்த்த விந்து,மலட்டு தன்மை,குறைவான விந்து,விறைப்புத் தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளை மகிழம் விதை வைத்து குணப்படுத்தலாம்.இது தவிர உடலில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு மகிழம் விதை தீர்வாக திகழ்கிறது.

காய்ச்சல்,தலைவலியில் இருந்து மீள மகிழம் விதையை சாப்பிடலாம்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற மகிழம் விதை சாப்பிடலாம்.வாய்ப்புண்,வயிற்றுப்புண் குணமாக மகிழம் விதை பொடியை சாப்பிட வேண்டும்.

தேங்காய் எண்ணையில் மகிழம் விதை பொடியை கலந்து தலைக்கு தடவி குளித்தால் பேன்,பொடுகு தொல்லை ஒழியும்.மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த மகிழம் விதை பொடியை பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிடலாம்.

நீர்த்த விந்து கெட்டியாக மலட்டு தன்மை நீங்க எளிய வீட்டு வைத்தியம்:

தேவைப்படும் பொருட்கள்:-

1)மகிழம் விதை – இரண்டு
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு மகிழம் விதை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வந்த பின்னர் அரைத்த மகிழம் விதை பேஸ்டை அதில் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது மீண்டும் ஒரு நிமிடத்திற்கு பாலை கொதிக்க வைக்க வேண்டும்.இதை கிளாஸிற்கு ஊற்றி சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் விந்து எண்ணிக்கை அதிகரிக்கும்.