இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் தண்ணீர் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.குடல் இயக்கத்தை மேம்படுத்துவதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாதது.நமது உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க அடிக்கடி தண்ணீர் பருக வேண்டும்.
தண்ணீரை சரியான நேரத்தில் பருகினால் உடலுக்கு அதிக ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்.அந்தவகையில் தினமும் காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:-
1)செரிமானம்
காலையில் எழுந்த உடன் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் பருகினால் செரிமான ஆரோக்கியம் மேம்படும்.
2)உடல் எடை
தினமும் காலை நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்.உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்க வேண்டும்.
3)சருமம் பொலிவு
உங்கள் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீர் பருக வேண்டும்.காலையில் எழுந்ததும் தண்ணீர் குடித்தால் முகத்தில் பருக்கள்,கருப்பு புள்ளிகள் மறையும்.
4)உடல் கழிவு வெளியேறுதல்
காலை நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.உடலில் படியும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற தண்ணீர் பருகலாம்.
5)உடல் ஆற்றல்
தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும்.உடல் சுறுசுறுப்பாக இயங்க தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் பருக வேண்டும்.
6)இரத்த ஓட்டம்
உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க காலையில் எழுந்ததும் தண்ணீர் பருக வேண்டும்.
7)நீர்ச்சத்து குறைபாடு
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தினமும் காலையில் தண்ணீர் பருக வேண்டும்.இப்படி பருகும் நீரில் எலுமிச்சை சாறு,சீரகம்,வெந்தயம் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் உடலுக்கு இன்னும் அதிக பலன் கிடைக்கும்.தினமும் காலை நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடலில் கழிவுகள் தேங்காமல் இருக்கும்.