தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

Photo of author

By Divya

தினமும் ஒரு முழு கேரட் சாப்பிட்டு இந்த 08 மருத்துவ குணங்களை பெறுங்கள்!!

Divya

நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் முக்கிய இடத்தில் கேரட் இருக்கின்றது.இந்த கேரட் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு காய்கறியாகும்.இதை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.கேரட் உடல் நலக் கோளாறுகள் மற்றும் சருமம் சார்ந்த பாதிப்புகளை சரி செய்யக் கூடியது.

கேரட் சாலட்,கேரட் ஜூஸ்,கேரட் கீர் என்று கேரட்டை தங்களுக்கு பிடித்தவாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

கேரட் ஊட்டச்சத்துக்கள்:

*பொட்டாசியம் *வைட்டமின் சி *வைட்டமின் பி6 *வைட்டமின் கே

1)சருமம் சார்ந்த பிரச்சனைகள் தீர கேரட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சருமம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

2)கண் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாக கேரட் சாப்பிடலாம்.தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.

3)உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கேரட் சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற வைட்டமின் பி6 நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.

4)குறைவான கலோரி கொண்ட கேரட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு கரையும்.கேரட்டில் இருக்கின்ற நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

5)இதில் இருக்கின்ற வைட்டமின் கே சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரை நோய் கட்டுப்பட கேரட்டை சாப்பிடலாம்.

6)உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க கேரட்டை சாப்பிடலாம்.கேரட்டில் இருக்கின்ற சோடியம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

7)குடல் இயக்கத்தை சீராக்க கேரட்டை சாப்பிடலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.

8)கேரட் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் பல் ஆரோக்கியம் மேம்படும்.

கேரட் ஜூஸ் செய்முறை:

தேவைப்படும் பொருட்கள்:

கேரட்
தேன்
தண்ணீர்

ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

இந்த கேரட் ஜூஸை வடிக்கட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.