இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

Photo of author

By Divya

இனி மாதா மாதம் கரெக்ட் டைம்க்கு பீரியட்ஸ் வர.. மூன்று நாட்கள் இதை குடுச்சி பாருங்க!!

Divya

மாதம் ஒருமுறை சந்திக்கும் மாதவிடாய் சுழற்சி சரியான நேரத்தில் வெளிப்பட பூசணி விதை,ஆளிவிதை,எள் விதை ஆகியவற்றை பயன்படுத்தி பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)எள் விதை – அரை தேக்கரண்டி
2)பூசணி விதை – அரை தேக்கரண்டி
3)ஆளிவிதை – கால் தேக்கரண்டி
4)பால் – ஒரு கப்
5)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து சிறிது சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் எள் விதை,ஆளிவிதை,பூசணி விதை ஆகிய மூன்றையும் சொல்லிய அளவுபடி போட்டு வாசனை வரும் வரை குறைவான தீயில் வறுக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த விதை ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்க வேண்டும்.பின்னர் ஒரு கப் பாலை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பாலில் அரைத்த பொடியை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பால் கெட்டியாகும் வரை காந்திருந்து அடுப்பை அணைக்க வேண்டும்.

பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வேண்டும்.இந்த பாலை மாதவிடாய் காலத்திற்கு முன்பு மூன்று தினங்கள் பருகினால் மாதவிடாய் கோளாறு சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தய விதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் வாணலி வைத்து வெந்தய விதை போட்டு வறுக்க வேண்டும்.வெந்தயம் பொன்னிறமாக வறுக்கப்பட்ட பிறகு ஆறவைக்க வேண்டும்.இந்த வெந்தயத்தை பொடித்து வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்த வெந்தயப் பொடியை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் பாதிப்பு குணமாகும்.