நல்ல நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க பாலில் சில பொருட்களை கலந்து பருகலாம்.இப்படி பால் குடித்து வந்தால் தொந்தரவு இல்லாத தூக்கம் கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)அஸ்வகந்தா பொடி – ஒரு ஸ்பூன்
3)கரு மிளகுப்பொடி – அரை ஸ்பூன்
4)மஞ்சள் பொடி – சிட்டிகை அளவு
செய்முறை விளக்கம்:-
பால் கால்சியம் சத்து நிறைந்த ஒரு ஆரோக்கிய பானமாகும்.பாக்கட் பாலுக்கு பதில் பசும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த பசும் பாலை தூக்கத்தை வர வைக்கும் ஒரு மேஜிக் பானமாக மாற்றலாம்.அதற்கு முதலில் ஒரு கிளாஸ் அளவிற்கு பசும் பால் எடுத்து பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பால் ஒரு கொதி வந்த பிறகு அரை ஸ்பூன் இடித்த மிளகு சேர்க்க வேண்டும்.அடுத்து ஒரு ஸ்பூன் அஸ்வகந்தா பொடி சேர்க்க வேண்டும்.
இறுதியாக சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு வடிகட்டி இரவில் தூங்கக் செல்வதற்கு முன்னர் பருகினால் எந்தஒரு தொந்தரவும் இன்றி நிம்மதியான தூக்கம் வரும்.
தேவையான பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)ஜாதிக்காய் தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.பால் பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்பு இதை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் அரைத்த ஜாதிக்காய் பொடியை அதில் மிக்ஸ் செய்து பருக வேண்டும்.இந்த ஜாதிக்காய் பாலை தினமும் பருகி வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.