இந்த ஒரு TEA கேஸ்ட்ரபுள் பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு தரும்!! இப்போவே ட்ரை பண்ணுங்க!!

0
2

மோசமான உணவுமுறை பழக்கத்தால் உடலில் கெட்ட வாயுக்கள் அதிகமாக தேங்கிவிடுகிறது.இந்த வாயுக் கோளாறில் இருந்துமீள இந்த மூலிகை டீ செய்து குடிங்கள்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
3)ஓமம் – ஒரு தேக்கரண்டி
4)பெருங்காயம் – சிட்டிகை
5)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி வெந்தயம்,ஒரு தேக்கரண்டி ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைத்த பிறகு அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து பெருங்காயத் தூள் போட்டு வெறும் வயிற்றில் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸ் ஒன்றிற்கு இதை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.இதை பருகி வந்தால் வாயுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

Previous articleகுதிகால் வெடிப்பு இரவோடு இரவாக மறையணுமா? அப்போ இதை தூங்கும் முன் செய்யுங்கள்!!
Next articleகரூர் வைஸ்யா வங்கி(KVB) அசத்தல் வேலை!! மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!