உடலில் எலும்புகள் வலிமை என்பது மிகவும் முக்கியமான ஒன்று.எலும்புகள் உறுதியாக இருந்தால் மட்டுமே மூட்டு வலி,முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்காமல் இருப்போம்.எனவே எலும்புகள் வலிமையை அதிகரிக்க இந்த முருங்கை விதையை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை விதை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)பசும் பால் – 150 மில்லி
செய்முறை விளக்கம்:-
முதலில் முருங்கை விதையை எடுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி அளவிற்கு பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பிறகு அரைத்த முருங்கை விதை பொடியை கொட்டி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பால் கொதித்து கெட்டியானதும் கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி நன்றாக கலந்து பருக வேண்டும்.இந்த முருங்கை விதை பால் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 10
2)பசும் பால் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பாதாம் நன்றாக ஊறி வந்த பிறகு அதன் தோலை நீக்கிவிட வேண்டும்.
அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
பால் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க வைத்து அரைத்த பாதாம் விழுதை அதில் போட்டு பருக வேண்டும்.இப்படி செய்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.தண்ணீர் சூடானதும் ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த முருங்கை கீரை பானத்தை பருகி வந்தால் எலும்புகள் வலிமை அதிகரிக்கும்.