கொளுத்தி எடுக்கும் வெயிலால் உடல் அதிக சூடாகிவிடுகிறது.இதனால் தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகிறது.உடல் சூட்டால கண,சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.எனவே உடல் சூடு தணிய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி குளிர்ச்சி தரும் பானம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா இலை – 10
2)இஞ்சி துண்டு – ஒன்று
3)உப்பு – சிறிதளவு
4)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளுங்கள்.எலுமிச்சை விதையை மட்டும் நீக்கிவிடுங்கள்.
அடுத்து கிண்ணம் ஒன்றை எடுத்து பத்து புதினா இலைகளை போட்டுக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு சிறிய துண்டு இஞ்சு எடுத்து தோலை நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இவற்றை இடித்து புதினா தழையுடன் சேர்க்க வேண்டும்.
அடுத்து பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை அதில் ஊற்ற வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)நன்னாரி வேர் – சிறிதளவு
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
3)சர்க்கரை பாகு – ஒரு தேக்கரண்டி
4)புதினா இலைகள் – ஐந்து
செய்முறை விளக்கம்:-
கிளாஸில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு நன்னாரி வேர் போட்டு ஊறவைக்க வேண்டும்.நன்னாரி வேர் நன்றாக ஊறிய பிறகு இந்த நீரை வேறொரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் எலுமிச்சை சாறு,புதினா இலை ஆகியவற்றை போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.
அடுத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை பாகுவை அதில் போட்டு கலக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உடல் சூடாகாமல் இருக்கும்.