காலை நேரத்தில் பருகும் ஒரு பானம் டீ,காபி.பாலில் தயாரிக்கப்படும் இந்த பானத்திற்கு பலரும் அடிமையாக இருக்கின்றனர்.ஆனால் இந்த பானங்களால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்காது.இதற்கு மாறாக உடல் ஆரோக்கியம்தான் கெடத் தொடங்கும்.எனவே இனி டீ,காபிக்கு பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானங்களை செய்து பருகி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருங்கள்.
1)நெல்லிக்காய் நீர்
முதலில் நான்கு பெரிய நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும்.இதை பாத்திரம் ஒன்றில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த நெல்லிக்காய் பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு இந்த பானத்தில் தேன் கலந்து பருக வேண்டும்.நெல்லிக்காயில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
2)மஞ்சள் நீர்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.
3)ஆளிவிதை நீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி ஆளிவிதை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த ஆளிவிதை பானத்தை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
4)அருகம்புல் நீர்
அதேபோல் காயவைக்கப்பட்ட அருகம்புல்லை மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக அரைக்க வேண்டும்.பிறகு ஒரு கிளாஸ் வெந்நீரில் இந்த அருகம்புல் பொடியை போட்டு கலக்கி பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.