மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!

Photo of author

By Divya

மோரில் ஒரு ஸ்பூன் இந்த பொடி கலந்து குடித்தால்.. வயிற்றுப்புண்கள் குணமாகும்!!

Divya

வயிற்றுப்புண்,அல்சர்,வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை பின்பற்றலாம்.இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கின்ற பலனை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய் வற்றல் – 50 கிராம்
2)கற்றாழை வற்றல் – நான்கு
3)சுக்கு – ஒரு துண்டு
4)கருப்பு மிளகு – கால் தேக்கரண்டி
5)பெருங்காயத் தூள் – 10 கிராம்
6)வசம்புத் தூள் – 20 கிராம்
7)சீரகம் – கால் தேக்கரண்டி
8)அகத்திக் கீரை பொடி – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

சுண்டைக்காய்,கற்றாழை,அகத்திக் கீரை ஆகிய மூன்றையும் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இவை மூண்றையும் தனி தனியாக மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து சுக்கு,கருப்பு மிளக,வசம்பு,சீரகம் ஆகியவற்றை சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்த பொருட்களை கிண்ணத்தில் கொட்டி கலந்துவிட வேண்டும்.அதன் பிறகு 10 கிராம் பெருங்காயத் தூளை அதில் கொட்டி மிக்ஸ் செய்ய வேண்டும்.

அடுத்து இதனை ஒரு டப்பாவில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு கிளாஸ் முழுவதும் பசுந்தயிர் செய்யப்பட்ட மோர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த மோரில் தயாரித்து வைத்திருக்கும் பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு மிக்ஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண்கள் ஆறும்.

வயிற்றுப்புண்ணுக்கு மற்றொரு தீர்வு:

1)மணத்தக்காளி கீரை – ஒரு கப்
2)மணத்தக்காளி காய் – கால் கப்

இவை இரண்டையும் வெயிலில் நன்கு காயவைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை அரைத்து டப்பாவில்
கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு பொடியை தண்ணீரில் மிக்ஸ் செய்து பருகினால் வயிற்றுப்புண் குணமாகும்.