உங்கள் குடலில் தேங்கிய புழுக்களை முழுமையாக வெளியேற்ற அற்புதமான நாட்டு வைத்திய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பூசணி விதை
2)தண்ணீர்
3)விளக்கெண்ணெய்
செய்முறை விளக்கம்:-
முதலில் 100 கிராம் அளவிற்கு பூசணி விதை வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த விதையை வாணலி ஒன்றில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.
பூசணி விதை பொன்னிறமாக வறுபட்ட பிறகு மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு டப்பாவில் இந்த பூசணி விதை பொடியை கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பூசணி விதைப்பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பூசணி விதை பானம் கொதித்து வந்த பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி சில துளிகள் விளக்கெண்ணெய் ஊற்றி பருகினால் குடலில் காணப்படும் புழுக்கள் மலத்தில் அடித்துக் கொண்டு வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)பாகற்காய் விதை – 50 கிராம்
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து 50 கிராம் பாகற்காய் விதை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பாகற்காய் விதை பொடியில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு கிளாஸ் வெந்நீர் கலந்து பருகினால் குடற்புழுக்கள் அழிந்துவிடும்.
அதேபோல் பாகற்காய் இலை,வேப்பிலை ஆகியவற்றை கொண்டு ஜூஸ் செய்து பருகினால் குடற்புழுக்கள் நீங்கிவிடும்.