உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

Photo of author

By Divya

உடல் எடையை குறைக்க முடியலையா? அப்போ இந்த விதையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிங்க!!

Divya

உங்கள் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் உடல் எடை கூடி நோய்கள் உருவாகிவிடுகிறது.இந்த உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க வெந்தய பானம் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)எலுமிச்சை ஜூஸ் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

நீங்கள் ஒரு பாத்திரம் எடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடுபடுத்துங்கள்.

தண்ணீர் சிறிது சூடானதும் ஒரு அளவிற்கு வெந்தயத்தை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.வெந்தய பானம் நன்றாக கொதித்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.

பிறகு இந்த வெந்தய பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை வெந்தய பானத்தில் பிழிந்துவிட வேண்டும்.பின்னர் இந்த பானத்தை பருகினால் உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பெருஞ்சீரக பானத்தை வடித்து தேன் ஊற்றி பருகி வந்தால் உடல் எடை தானாக குறைந்து கட்டுப்படும்.அதேபோல் சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகி வந்தால் உடல் கொழுப்பு கரையும்.அதேபோல் கருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகி வந்தால் உடல் எடை குறையும்.