பெரும்பாலானவருக்கு வயிற்றுப் பகுதியில் மட்டும் அதிக கொழுப்பு படிந்து உடல் எடை கூடியது போன்று இருக்கும்.அதேபோல் தொப்பை,கை உள்ளிட்ட இடங்களிலும் அதிக கொழுப்பு படியும்.இந்த கெட்ட கொழுப்பை கரையும் எளிய வீட்டு வைத்தியம் இதோ.
தீர்வு 01:
வெண்கடுகு
உலர்ந்த இஞ்சி
நாட்டு மருந்து கடையில் வெண்கடுகு,உலர்ந்த இஞ்சி கிடைக்கும்.இவற்றை தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு உரல் அல்லது மிக்சர் ஜாரில் வெண்கடுகு ஒரு தேக்கரண்டி மற்றும் ஒரு துண்டு உலர்
இஞ்சியை போட்டு சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பேஸ்டை தொப்பை மீது பூசினால் கொழுப்புகள் கரையும்.
அதேபோல் உடலில் கெட்ட கொழுப்புகள் குவிந்து கிடக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.
தீர்வு 02:
நாட்டு பாதாம்
மஞ்சள் தூள்
ஐந்து அல்லது ஆறு நாட்டு பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு நன்கு ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு மிக்ஸ் செய்து உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாக உள்ள இடத்தில் பூச வேண்டும்.இதுபோன்று செய்து வந்தால் கொழுப்பு கரைந்துவிடும்.
தீர்வு 03:
தேங்காய் எண்ணெய்
நல்லெண்ணெய்
கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்,ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
பிறகு இதை லேசாக சூடாக்கி வயிற்று தொப்பை மீது ஊற்றி தேய்த்தால் கொழுப்பு தானாக கரைந்துவிடும்.
தீர்வு 04:
எலுமிச்சை சாறு
தேன்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் உடல் கொழுப்பு தானாக கரையும்.