தற்பொழுது முடக்குவாத பாதிப்பை முதியவர்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரும் அனுபவித்து வருகின்றனர்.மூட்டு எலும்புகள் வலிமை இல்லாததால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த முடக்குவாத பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)நிலவேம்பு
2)முடக்கத்தான் கீரை
3)ஆடாதோடை இலை
4)சீந்தில்
5)வாதநாராயணன் இலை
6)கருப்பு மிளகு
7)திப்பிலி
8)சித்திரத்தை
9)கடுக்காய்
10)அதிமதுரம்
11)சுக்கு
12)பூனைக்காலி விதை
13)அமுக்கிரா கிழங்கு
செய்முறை விளக்கம்:-
முதலில் முடக்கத்தான் கீரை,ஆடாதோடை இலை,வாதநாராயணன் இலை,சீந்தில் கொடி ஆகியவற்றை சம அளவு எடுத்தல் கொள்ள வேண்டும்.
இவற்றை வெயிலில் நன்றாக காயவைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து கருப்பு மிளகு,திப்பிலி,சித்தரத்தை,கடுக்காய்,அதிமதுரம்,சுக்கு,பூனைக்காலி,அமுக்கிரா கிழங்குக்கு ஆகிய ஒவ்வொன்றையும் தலா 10 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் வாணலியில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது இவற்றை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டு வகை பொடியையும் ஈரம் இல்லாத ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் இந்த பொடி ஒரு ஸ்பூன் அளவு கலந்து காலை மற்றும் மாலை நேரத்தில் பருக வேண்டும்.அதேபோல் குழம்பு,கீரை கூட்டு,சூப் போன்றவற்றிலும் இந்த பொடியை கலந்து சாப்பிடலாம்.இப்படி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி இல்லாமல் வாழலாம்.
முடக்குவாத பிரச்சனை இருப்பவர்கள் இந்த பொடியை சாப்பிட்டு வருவதன் மூலம் நல்ல பலனை அனுபவிக்கலாம்.மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் நாட்டு மருந்து கடை,சித்த வைத்தியசாலை போன்றவற்றில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கி வைத்து பயன்படுத்தலாம்.