மூட்டு வலிக்கு ஆட்டுக்கால் சூப் நல்லதா? மருத்துவர் சொல்வது என்ன?

Photo of author

By Divya

மூட்டு வலிக்கு ஆட்டுக்கால் சூப் நல்லதா? மருத்துவர் சொல்வது என்ன?

Divya

இந்த காலத்தில் மூட்டு வலி,முழங்கால் வலி,முதுகு வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவர்கள் அதிகமாக உள்ளனர்.உடல் எலும்பின் வலிமை குறைவதால் இதுபோன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.பெரியவர்கள் மட்டும் அனுபவித்து கொண்டிருந்த எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தற்பொழுது இளம் வயதினரும் அனுபவித்து வருகின்றனர்.

பொதுவாக அந்த காலம் முதல் இந்த காலம் வரை மூட்டு வலி வந்தால் ஆட்டுக்காலில் சூப் செய்து குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி குறையும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு விஷயம்.

உண்மையில் ஆட்டுக்கால் சூப் குடித்தால் மூட்டு வலி குணமாக என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் விளக்கி இருக்கிறார்.ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுக்கால் ஆகிய இரண்டும் உடலுக்கு வெவ்வேறு நன்மைகளை வழங்குகிறது.ஆட்டிறைச்சி புரதம் நிறைந்த அசைவமாகும்.ஆட்டுக்கால் கொலாஜன் சத்து நிறைந்த அசைவமாகும்.

நமது மூட்டிற்கு கொலாஜன் சத்து அவசியமான ஒன்றாக இருக்கிறது.அப்படி இருக்கையில் இந்த கொலாஜன் சத்து நிறைந்த ஆட்டுக்காலை உணவாக சாப்பிடும் பொழுது நமது மூட்டு ஜவ்வுகளுக்கு வலிமை கிடக்கிறது.ஆகவே ஆட்டுக்கால் சாப்பிடுவதன் மூலம் மூட்டு வலி பாதிப்பை குறைக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார்.

ஆட்டுக்கால் சூப் ரெசிபி:

தேவையான பொருட்கள்:-

1)ஆட்டுக்கால் – இரண்டு
2)பூண்டு பல் – பத்து
3)கரு மிளகு – கால் தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)கொத்தமல்லி தழை – சிறிதளவு
6)கொத்தமல்லி தூள் – ஒரு தேக்கரண்டி
7)உப்பு – தேவையான அளவு
8)எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
9)இஞ்சி – ஒரு துண்டு
10)சீரகம் — கால் தேக்கரண்டி
11)வர மிளகாய் – இரண்டு
12)தக்காளி – ஒன்று

செய்முறை விளக்கம்:-

முதலில் சீரகம்,வர மிளகாய்,கரு மிளகு ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள அளவுபடி எடுத்து வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு ஆட்டுக்கால் எடுத்து வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு பூண்டு மற்றும் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு இஞ்சி பூண்டு விழுதை அதில் போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தக்காளி பழத்தை அரைத்து அதில் ஊற்றி வதக்க வேண்டும்.

பின்னர் சீரகக் கலவையை அதில் கொட்டி வதக்க வேண்டும்.அடுத்து வெட்டி வைத்துள்ள ஆட்டுக்கால் போட்டு கொத்தமல்லி தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 6 முதல் 7 விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.பிறகு கொத்தமல்லி தழை தூவி ஆட்டுக்கால் சூப்பை பருகலாம்.