நமக்கு மலிவு விலையில் கிடைத்த புரத உணவு முட்டை.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முட்டையை விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் வறுவல்,பொரியல்,ஆம்லெட்,கலக்கி,முட்டை பரோட்டா,தொக்கு,குழம்பு,கிரேவி என்று பல வித விதமான உணவுகள் செய்து சாப்பிடப்படுகிறது.
முட்டையில் புரதம்,கோலின்,வைட்டமின்கள் முதலானவை நிறைந்து காணப்படுகிறது.ஒரு முட்டையில் 6 கிராம் பபுரதம் நிறைந்து காணப்படுகிறது.இந்த முட்டையை வேகவைத்து சாப்பிட்டால் கண் ஆரோக்கியம் மேம்படும்.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.இதை சாப்பிடுவதால் பல் வலிமை அதிகரிக்கும்.முட்டையில் இருக்கின்ற புரதம் உடல் வலிமையை அதிகரிக்கிறது.தரளந்த தசைகள் இறுக முட்டையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.வேக வைத்த முட்டை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.அதன் பிறகு வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.
ஐந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு தினமும் அரை முட்டை சாப்பிட கொடுக்கலாம்.பெரியவர்கள் நாளொன்றில் இரண்டு அல்லது மூன்று முட்டை சாப்பிடலாம்.உடல்
பருமன்,கொலஸட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தவிர்த்துவிட வேண்டும்.
50 வயதை கடந்தவர்கள் தினம் ஒரு முட்டை சாப்பிடலாம்.இதய நோய்,சர்க்கரை நோய் இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.உடலில் கொழுப்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் தினமும் வேகவைத்த முட்டையின் மஞ்சள் கரு இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை தவிர்ப்பது நல்லது.