நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

Photo of author

By Divya

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

Divya

உடலில் வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்கிறது.ஆண்,பெண் அனைவருக்கும்வயிற்றுப் பகுதியில்தான் அதிக கொழுப்பு சேர்க்கிறது.அதேபோல் பிரசவித்த பெண்களுக்கு வயிற்று தொப்பை போடுகிறது.வயிற்றுப் பகுதியில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த பானம் செய்து பருகுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு டம்ளர்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வறுத்த சீரகத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பானத்தை வடித்து எலுமிச்சை சாறு கலந்து பருகினால் அடிவயிற்று தொப்பை,பிரசவ தொப்பை குறையும் .

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு டம்ளர்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பெருஞ்சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் அடிவயிற்று கொழுப்ப,பிரசவ கொழுப்பு குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி துண்டு – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இஞ்சி துண்டை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி கலந்து பருக வேண்டும்.இப்படி தினமும் செய்து வந்தால் அடிவயிற்று கொழுப்பு கரையும்.