நம் அனைவருக்கும் பழங்கள் சாப்பிடுவது பிடித்த விஷயமாக இருக்கிறது.பழங்களில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக உலர்ந்த பழங்களில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
உலர் திராட்சை,உலர் அத்தி,பேரிச்சை போன்ற உலர் பழங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதில் உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
உலர் திராட்சை ஊறவைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்:
1)இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உலர் திராட்சை நீர் உதவுகிறது.இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கரைக்க உலர் திராட்சை நீர் பருகலாம்.
2)உலர் திராட்சையில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.
3)உடல் சோர்வு நீங்க உலர் திராட்சை நீர் பருகலாம்.உலர் திராட்சையில் இருக்கின்ற ஆன்டி ஆகஸிடன்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது.
4)உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.அதேபோல் பாஸ்பரஸ்,தாதுக்கள் எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
5)இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடலாம்.உடல் கொலஸ்ட்ரால் அளவு குறைய உலர் திராட்சை நீர் பருகலாம்.
6)சரும ஆரோக்கியம் மேம்பட உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.உலர் திராட்சையில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
7)குடல் ஆரோக்கியம் மேம்பட உலர் திராட்சை ஊறவைத்த நீர் பருகலாம்.இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் ஊறவைத்த உலர் திராட்சை நீர் பருகலாம்.
8)உடல் சூடு தணிய உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக உலர் திராட்சை ஊறவைத்த நீரை பருகலாம்.