அசைவ சுவைக்கு இணையான சைவப் பொருள் மீல் மேக்கர்.இது கோழி இறைச்சியை போன்ற சுவையை கொடுக்கிறது.இந்த மீல் மேக்கரில் பிரியாணி,கிரேவி,குழம்பு,சுக்கா,வறுவல்,பிரட்டல் என்று பலசுவையான
உணவுகள் தயாரித்து சாப்பிடப்படுகிறது.
இறைச்சியைவிட மிகவும் மலிவு விலையில் இந்த மீல் மேக்கர் கிடைக்கின்ற காரணத்தால் பலரும் இதை வாங்கி சாப்பிடுகின்றனர்.இந்த மீல் மேக்கர் சோயா பீனில் இருந்து தயாரிக்கப்படும் பொருளாகும்.சோயா பீனில் வைட்டமின்கள்,தாதுக்கள் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் இந்த மீல் மேக்கரில் கால்சியம்,வைட்டமின் டி,வைட்டமின் பி,போலேட்,மாங்கனீசு,துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
**இந்த மீல் மேக்கரை சாப்பிடுவதால் உடல் எலும்புகள் பலப்படும்.மீல் மேக்கர் சாப்பிடுபவர்களுக்கு எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சன்னைகளே வராது.
**மீல் மேக்கர் உணவு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதில் இருக்கின்ற ஒமேகா
3 கொழுப்பு அமிலம் உடலில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த உதவுகிறது.
**இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மீல் மேக்கர் சாப்பிடலாம்.உடல் எடையை குறைக்க மீல் மேக்கர் உணவு சாப்பிடலாம்.
**செரிமானப் பிரச்சனையை சரி செய்ய மீல் மேக்கர் சாப்பிடலாம்.புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆனால் அளவிற்கு அதிகமாக மீல் மேக்கர் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.நாம் அடிக்கடி மீல் மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு பல பக்கவிளைவுகள் ஏற்படும்.
**அதிக மீல் மேக்கர் உணவு வயிற்றுவலியை உண்டாக்கும்.அதேபோல் சிலருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.
**அடிக்கடி மீல் மேக்கர் உணவு சாப்பிட்டால் தலைவலி உண்டாகும்.அதிக மீல் மேக்கர் சாப்பிடுவதால் தசை மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும்.
**மீல் மேக்கர் உணவை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படலாம்.