மார்பு பகுதியில் உருவாகும் சளியால் மூக்கடைப்பு,தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அதேபோல் நெஞ்சு சளியால் மூச்சு விடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.இந்த நெஞ்சு சளி கரைய ஆட்டு நெஞ்சு எலும்பில் சூப் செய்து பருகலாம்.
நெஞ்சு சளியை கரைத்து தள்ளும் ஆட்டு நெஞ்சு எலும்பு சூப்:
தேவையான பொருட்கள்:-
1)ஆட்டு நெஞ்சு எலும்பு – 1/4 கிலோ
2)வெள்ளைப்பூண்டு பற்கள் – 10
3)சின்ன வெங்காயம் – 10
4)கரு மிளகு – கால் தேக்கரண்டி
5)சீரகம் – கால் தேக்கரண்டி
6)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
7)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
8)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
9)உப்பு – தேவையான அளவு
10)கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஆட்டு நெஞ்சு எலும்பை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கால் தேக்கரண்டி கருப்பு மிளகு மற்றும் சீரகம்,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை வருத்து ஆறவைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அடுப்பில் குக்கர் வைத்து சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அடுத்து இடித்து வைத்துள்ள பூண்டு,இஞ்சி விழுதை போட்டு வதக்க வேண்டும்.அடுத்து அரைத்த கொத்தமல்லி கலவையை அதில் கொட்டி வதக்க வேண்டும்.பின்னர் ஆட்டு நெஞ்சு எலும்புகளை அதில் போட்டு நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.
பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.அதன் பிறகு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து,ஆறு விசில் விட்டு எடுக்க வேண்டும்.பிறகு அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும்.நெஞ்சு எலும்பு சூப்பில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.