பெற்றோர்களே உஷார்!! உங்கள் குழந்தை Tea-க்கு அடிமையாவது நல்ல பழக்கமா?

Photo of author

By Divya

பெற்றோர்களே உஷார்!! உங்கள் குழந்தை Tea-க்கு அடிமையாவது நல்ல பழக்கமா?

Divya

நம்முடைய ஒவ்வொரு நாள் காலை பொழுதும் டீ அல்லது காபி போன்ற சூடான பானங்களுடன் தொடங்குகிறது.இந்தியர்கள் வாழ்வில் ஒரு அங்கமாகவே இந்த டீ,காபி மாறிவிட்டது.சிறியவர்கள் பெரியவர்கள் என்று அனைவரும் டீ குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

தினமும் நான்கு அல்லது ஐந்து டீ,காபி குடிக்கும் பழக்கத்தை பலர் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.உண்மையில் டீ,காபி சுவையே அதற்கு அடிமையாக காரணம்.டீ,காபி குடித்தால் உடலுக்கு ஒரு புத்துணர்வு கிடைத்தது போன்ற உணர்வு தோன்றுவதால் இதை களைப்பை போக்கும் பானமாக பலரும் கருதுகின்றனர்.

அதேபோல் தலைவலி வந்தாலும் காபி,டீ குடித்து சரி செய்யலாம் என்பதை பலரும் நம்புகின்றனர்.டீ,காபி போன்றவற்றில் காஃபின் என்ற இரசாயனம் இருக்கிறது.இது உடலுக்கு புத்துணர்வு கொடுக்கும் என்றாலும் இதில் சில தீமைகளும் நிறைந்து காணப்படுகிறது.

டீ,காபி போன்ற பானங்களில் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்படுவதால் அதை தொடர்ந்து பருகும் நபர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.காஃபின் நிறைந்த இந்த டீ,காபி பானங்களை பருகும் குழந்தைகளின் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காஃபின் பானங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து?

1)டீ,காபி போன்ற பானங்களை தொடர்ந்து பருகும் குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.இந்த பிரச்சனை பெரியவர்களுக்கும் ஏற்படுகிறது.

2)குழந்தைகளுக்கு டீ,காபி போன்ற பானங்களை பருக கொடுப்பதால் அவர்களுக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படும்.இதனால் அவர்கள் உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிக்க நேரிடுகிறது.

3)டீ,காபி போன்ற பானங்களை பருகுவதால் கோபம்,பதற்றம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

4)சில குழந்தைகளுக்கு டீ,காபி போன்ற பானங்கள் உடல் சோர்வு,குமட்டல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

5)காஃபின் பானங்களை குழந்தைகள் தொடர்ந்து பருகினால் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.