ஆரோக்கியமற்ற உணவுகளால் குடலில் தேங்கும் கழிவுகளால் வாயுக் கோளாறு ஏற்படுகிறது.இந்த வாயுத்
தொல்லை நீங்க அருமையான தீர்வு சொல்லப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பெருஞ்சீரகம்
2)வெள்ளை கற்கண்டு
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை அதில் போட்டு வறுக்க வேண்டும்.இதை ஆறவைத்து பொடியாக்க வேண்டும்.
அடுத்து வெள்ளை கற்கண்டை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து இரண்டையும் கலந்து கொள்ள வேண்டும்.அடுத்து இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டால் நீண்ட நாள் மலக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேறும்.
தேவையான பொருட்கள்:-
1)சீரகம்
2)சோம்பு
3)கற்கண்டு
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம்,ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து வறுக்க வேண்டும்.இதை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிறிதளவு கற்கண்டை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)ஓமம்
2)சீரகம்
செய்முறை விளக்கம்:-
ஒரு தேக்கரண்டி ஒம்ம மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.இதை கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் கொட்டி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வாயுத் தொல்லை,வயிறு உப்பசம்,மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.