தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால்.. உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Divya

நாம் சாப்பிடும் பழங்கள் ஊட்டச்சத்துக்கள்,வைட்டமின்கள் நிறைந்தவையாக இருக்கிறது.குறிப்பாக மாதுளை போன்ற பழங்களில் அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.தினம் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதுளம் பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.மாதுளம் பழத்தை சாறாக பருகி வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.பெண்களின் கருப்பை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.

மாதுளம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மூளை செயல்பாட்டை ஊக்குவிக்கும் மருந்தாக இந்த மாதுளம் பழம் உள்ளது.செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்பட மாதுளம் பழத்தை சாப்பிடலாம்.இரத்த சர்க்கரை அளவை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.

உடலுக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் கிடைக்க மாதுளை ஜூஸ் செய்து குடிக்கலாம்.முடி வளர்ச்சியை அதிகரிக்க மாதுளை ஜூஸ் குடிக்கலாம்.சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க மாதுளையில் ஜூஸ் செய்து பருகலாம்.இரத்த சோகை நோய் குணமாக மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.வைரஸ் காய்ச்சலில் இருந்துவிடுபட மாதுளையில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.உடல் காயங்கள் விரைவில் குணமாக மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.

மாதுளை ஜூஸ் பருகக் கூடாதவர்கள்:

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் மாதுளை ஜூஸ் பருகுவதை தவிர்க்க வேண்டும்.வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை இருப்பவர்கள் மாதுளை ஜூஸ் பருகுவதை தவிர்க்க வேண்டும்.காய்ச்சல்,இருமல்,சளி போன்ற பாதிப்பில் இருந்து மீள மாதுளை ஜூஸ் செய்து பருகலாம்.