உங்கள் கல்லீரலில் குவிந்துள்ள கொழுப்புகளை கரைத்து தள்ள உதவும் நமது பாரம்பரிய வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)கரிசலாங்கண்ணி
2)முசுமுசுக்கை
செய்முறை விளக்கம்:-
முதலில் கரிசலாங்கண்ணி மற்றும் முசுமுசுக்கை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை நிழலில் பரப்பி நன்றாக காய வைக்க வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதனை ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த கஷாயம் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து ஆறவைக்க வேண்டும்.இந்த கஷாயத்தை வடிகட்டி குடித்து வந்தால் ஈரலில் குவிந்த கொழுப்பு கரைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ள வேண்டும்.பின்னர் அதில் ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி கலக்கி வெறும் வயிற்றில் பருகி வந்தால் ஈரலில் குவிந்த கொழுப்பு கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பூண்டு பானத்தை வடித்து பருகினால் ஈரல் கொழுப்பு நன்றாக கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)ஆளிவிதை – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஆளிவிதையை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
அதன் பிறகு அரைத்த ஆளிவிதையை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடித்து பருகி வந்தால் கல்லீரல் கொழுப்பு கரையும்.