கிட்னியில் படிந்துள்ள கற்களை கரைக்க இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஜூஸை செய்து தினமும் பருகுங்கள்.நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)இளநீர்
2)நீர்முள்ளி விதை பொடி
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு இளநீர் எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி அளவிற்கு நீர்முள்ளி விதை பொடியை கலந்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.இந்த இளநீரை தினமும் பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)வாழைத்தண்டு
2)சீரகம்
3)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கப் வாழைத்தண்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இந்த ஜூஸை கிளாஸிற்கு வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.இதை வாழைத்தண்டு ஜூஸில் கலந்து பருகினால் சிறுநீரக கற்கள் கரையும்.அதேபோல் ரணகள்ளி இலையில் டீ போட்டு குடித்தால் சிறுநீரக கற்கள் தானாக கரையும்.
தேவையான பொருட்கள்:-
1)முள்ளங்கி துண்டுகள்
2)எலுமிச்சை ஜூஸ்
செய்முறை விளக்கம்:-
முள்ளங்கியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முள்ளங்கி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.இந்த ஜூஸை பருகி வந்தால் சிறுநீரக கற்கள் தானாக கரையும்.