உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக வரும்.கை,காலில் வலி வீக்கம் ஏற்பட்டால் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.இந்த யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை செய்து பருகுங்கள்.
தீர்வு 01:
வெள்ளரிக்காய் – ஒன்று
தண்ணீர் – ஒரு கிளாஸ்
முதலில் ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெள்ளரிக்காய் ஜூஸை அடிக்கடி குடித்தால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
தீர்வு 02:
தர்பூசணி கீற்று – ஒரு கப்
தண்ணீர் – தேவையான அளவு
முதலில் ஒரு கீற்று தர்பூசணி பழத்தை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த தர்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடித்து பருகி வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.
தீர்வு 03:
இஞ்சி – ஒரு துண்டு
தண்ணீர் – ஒரு கிளாஸ்
பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி சேர்த்து கொதிக்க வையுங்கள்.
இந்த இஞ்சி நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பிறகு இந்த இஞ்சி பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து குடிங்க.இப்படி வாரத்தில் மூன்று நாட்களுக்கு இஞ்சி பானம் செய்து குடித்தால் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.